வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஓட்டோவா: தன் மனைவி ஷோபியாகிரிகோரியாவை பிரிவதாக கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
52 வயதாகும் ஜஸ்டின் ட்ரூடோ, மனைவி ஷோபியாகிரிகோரியா ,47 வை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கனடா பிரமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் , நாங்கள் பிரிந்தாலும், எப்போதும் போல் ஒருவரையொருவர் ஆழமான அன்புடன் இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
![]() |
கனடாவின் லிபரல் கட்சி தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது கனடாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2019ம் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையுடன் 2வது முறையாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், 2021ல் மீண்டும் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையுடன் 3-வது முறையாக பிரதமரானார்.
இந்நிலையில் இன்று (02 ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது 18 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதால் மனைவி ஷோபியா கிரிகோரியை பிரிகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement