4 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி.!

பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய். பிரபலமான கலை இயக்குனரான இவர் ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில் நிதின் தேசாய் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமீர்கான் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட ஹிட்டடித்த ‘லகான்’, ஷாருக்கான், ஐஸ்வர்யா, மாதுரி தீட்சித் நடிப்பில் வெளியான ‘தேவதாஸ்’ மற்றும் ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான ‘ஜோதா அக்பர்’ போன்ற பல பிரம்மாண்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், லகான், ஹம் தில் தி சுகே சனம், தேவதாஸ் ஆகிய படங்களில் சிறப்பாக கலை இயக்குனராக பணியாற்றியதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.

Jailer: ‘ஜெயிலர்’ டிரெய்லரில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுதான்: டிரெண்டிங்கில் கலக்கும் தலைவர்.!

இந்நிலையில் நிதின் தேசாய் மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள தனது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 57 வயதான நிதின் தேசாய் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருந்தார்.

இதுபோன்ற சூழலில் நிதின் தேசாய் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நிதின் தேசாய் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Maamannan: இன்னும் மீளவில்லை.. ‘மாமன்னன்’ படம் குறித்து திடீரென லோகேஷ் போட்ட ட்வீட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.