வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: இந்தியா உடன் அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:
நாங்கள் யாருக்கு எதிராகவும் இல்லை. நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில் இனிமேலும் ஒரு போருக்கு நாடு தயாராக இல்லை.
இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement