அப்செட் ஆக்கிய KSRTC.. அதிரடி காட்டும் கொச்சி மெட்ரோ… தனியார் பஸ்களுடன் கைகோர்க்க திட்டம்!

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் முக்கிய ரயில் நிலையங்களுக்கு இ – பஸ் சேவைகளை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கொச்சி வாட்டர் மெட்ரோகேரள மாநிலம் கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாட்டர் மெட்ரோ படகுகள் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பத்து தீவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.இ பஸ் சேவைகள்
மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் பஸ், ஆட்டோ, கார் ஆகியவைகளில் பயணிப்பது போன்று படகிலும் பயணம் செய்யும் வகையில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சி மெட்ரோவின் இணைப்பை மேம்படுத்தும் வகையில், கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் ( KMRL) காக்கநாட்டில் உள்ள வாட்டர் மெட்ரோ டெர்மினலில் இருந்து இன்போபார்க் மற்றும் காக்கநாட்டின் பிற பகுதிகளுக்கு இ-பஸ் சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மெட்ரோ ஃபீடர் சேவைகள்நகரின் பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் மின்சார ஃபீடர் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு பேருந்து நடத்துநர்களின் ஆர்வத்தை KMRL கேட்டுள்ளது. தற்போது கேரள அரசு நிறுவனமான KSRTC காக்கநாடு வாட்டர் மெட்ரோ முனையத்தை இன்போபார்க்குடன் இணைக்கும் மெட்ரோ ஃபீடர் சேவைகளை இயக்கி வருகிறது.
சர்வீஸ் சரியல்லஆனால் KSRTC பேருந்துகள் சீரான இடைவெளியில் சேவைகளை இயக்க தவறி வருவதாகவும், பயணிகளை கவரும் வகையில் ஃபீடர் சேவைகள் செயல்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. சேவைகளில் குளறுபடி மற்றும் சேவைகள் ரத்து செய்யப்படுவது போன்ற காரணங்களால் வைட்டிலா மற்றும் காக்கநாடு வாட்டர் மெட்ரோ சேவையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ பலமுறை வன்கொடுமை.. திருமணத்திற்கு பிறகும் விடாத அப்பா… மகள் செய்த தரமான சம்பவம்!​நம்புவது போல் இல்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொச்சி நெக்ஸ்ட் போரமின் அர்ஜுன் பிரகாஷ், KSRTC சேவையின் பாதை மற்றும் சேவைகளின் நேர அட்டவணையில் குழப்பங்கள் இருப்பதால், காக்கநாட்டிலிருந்து KSRTC இன் தற்போதைய ஃபீடர் சேவைகள் நம்பகமானவை அல்ல என கூறியுள்ளார். மேலும் KSRTC அல்லது KMRL சேவையின் வழித்தடம், நிறுத்தங்கள் மற்றும் சேவைகளின் நேர அட்டவணையை வெளியிடத் தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார்.
அடிக்கடி ரத்து
மேலும் இந்த சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல பேருந்துகள் நல்ல நிலையில் இல்லை என்றும், அடிக்கடி சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். ஃபீடர் சேவைகள் முக்கியமாக இன்ஃபோபார்க்கின் ஊழியர்களை வைட்டிலா மற்றும் காக்கநாடு வாட்டர் மெட்ரோ முனையத்தை இணைக்கும் வழியில் தொடங்கப்பட்டது என்றும் ஆனால் வழித்தடங்கள் மற்றும் நேர அட்டவணை தெளிவாக இல்லாததால், இந்த சேவை எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமடையவில்லை என்றும் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களுடன்இதனால் KMRL தனியார் பேருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்து புதிய ஃபீடர் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனிடையே வாட்டர் மெட்ரோ முனையங்களுக்கு ஏசி பேருந்துகளை அறிமுகப்படுத்தவும் மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத பேருந்துகளை ஃபீடர் சேவைகளாக இயக்கவும் KMRL திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், KMRL அதன் ஃபீடர் சேவைகளை நிறுத்தி, Kleen and Smart Bus Limited நிறுவனங்களுடன் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.
​ திருப்பதி கோவிலில் அதிரடி மாற்றம்… அல்ட்ரா மாடர்னாய் மாறும் ஏழுமலையான்.. அந்த சம்பவம்தான் காரணமா?​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.