வாவ், கோவா அல்போன்சா மாம்பழம்… அடிச்சுது ஜாக்பாட்… புவிசார் குறியீடும், தரமான சம்பவமும்!

பழங்களின் ராஜா என்றால் சட்டென நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சிறப்பு வாய்ந்த மாம்பழங்கள் இருக்கின்றன. உதாரணமாக தமிழகத்தை எடுத்து கொண்டால் மல்கோவா செம ஃபேமஸ். அப்படியே கர்நாடகா பக்கம் போனால் படாமி, ராஷ்புரி, தோடாபுரி போன்ற மாம்பழ வகைகளை குறிப்பிடலாம். ஆந்திராவில் சிந்தூரா, மகாராஷ்டிராவில் அல்போன்சா என சொல்லிக் கொண்டே போகலாம்.

மாம்பழ வகைகள்குறிப்பாக தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் தான் தனித்துவம் வாய்ந்த மாம்பழ வகைகள் விளைவிக்கப் படுகின்றன. அந்த வகையில் கோவா மாநிலத்தில் மன்குராட் (Mancurad), பெபின்கா (Bebinca) ஆகிய மாம்பழ வகைகள் சிறப்பு வாய்ந்தவை. இவற்றை தரமான முறையில் கோவாவை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.உரிய அங்கீகாரம் தேவைஇந்த மாம்பழ வகைகளுக்கு உரிய அங்கீகாரம் பெறாத காரணங்களால், பிற மாநிலங்களில் இருந்து சில மாம்பழ வகைகளை கொண்டு வந்து மன்குராட், பெபின்கா என்று கூறி விற்கப்படுவதை பார்க்கலாம். இவற்றை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றும் போது நல்ல சுவை கிடைப்பதில்லை. இதனால் ஒரிஜினல் மாம்பழங்களை உற்பத்தி செய்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.​கோவா மன்குராட் & பெபின்கா மாம்பழங்கள்இந்த சூழலில் மன்குராட் வகை மாம்பழத்திற்கு புவி சார் குறியீடு பெறும் முயற்சியில் அனைத்து கோவா மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கம் ஈடுபட்டது. இதேபோல் பெபின்கா வகை மாம்பழத்திற்கு புவி சார் குறியீடு பெற அனைத்து கோவா பேக்கர்ஸ் அண்ட் கன்ஃபெக்‌ஷனரிஸ் சங்கம் முயற்சி செய்தது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.​புவி சார் குறியீடுஇதன் பலனாக ஆகஸ்ட் 1, 2023 அன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 7 பொருட்களுக்கு புவி சார் குறியீடு வழங்கி சென்னையை சேர்ந்த புவி சார் குறியீட்டு பதிவகம் (Geographical Indicataions Registry) உத்தரவிட்டுள்ளது. அந்த லிஸ்டில், ஜலேசர் தாது ஷில்ப் என்ற மெட்டல் கிராப்ட், கோவா மன்குராட் மாம்பழம், கோவா பெபின்கா மாம்பழம், உதய்பூர் கோஃப்ட்காரி மெட்டல் கிராப்ட், பிகானெர் கஷிதாகரி கிராப்ட், ஜோத்பூர் பந்தேஜ் கிராப்ட், பிகானெர் உஷ்தா காலா கிராப்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.​பாரம்பரிய உற்பத்தி மற்றும் தரம்புவி சார் குறியீடு கிடைத்ததன் மூலம் மேற்குறிப்பிட்ட பொருட்களை பாரம்பரிய முறையில் தயாரிக்க முடியும். அதன் தரம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவா மன்குராட் மாம்பழத்தை கோவா அல்போன்சா என்றும் அழைப்பர். இதன் இனிப்பான சுவை, மெலிதான தோல், உட்புற பழக் கூழ் உள்ளிட்டவை வேற லெவலில் இருக்கும். போர்ச்சுகீசியர்கள் இந்த வகை மாம்பழத்திற்கு முதலில் மல்கோரடா என்று பெயர் வைத்துள்ளனர்.​போர்ச்சிகீசிய பின்னணிஅதாவது, இவர்கள் தான் இந்த வகையை முதலில் கண்டறிந்ததாக தெரிகிறது. இது காலப்போக்கில் மன்குராட் எனப் பெயர் மாறியுள்ளது. இதேபோல் கோவா பெபின்கா வகை மாம்பழத்தை பிபிக் என்றும் அழைப்பர். இது கோவா மாநிலத்தின் பாரம்பரிய பழ வகைகளில் முதன்மையானது. பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களில் பெபின்கா மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஐஸ்கீர்ம், கேக் வகைகளை சொல்லலாம். இது இந்தோ – போர்ச்சுகீசிய பாரம்பரியத்தை சேர்ந்தது. கோவாவின் பழ வகைகளின் ராணி என்று அழைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.