மங்களூரு :ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் பெயரில், சமூக வலைதளத்தில் போலியான கணக்கு திறந்து, ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
தட்சிண கன்னடா, மங்களூரின், ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகரின் பெயரில், விஷமிகள் போலியான முகநுால் கணக்கு திறந்துள்ளனர். இதன் வழியாக ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை வெளியிட்டனர். இது தொடர்பாக, மங்களூரின், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார்.
கல்லட்கா பிரபாகர் கூறியதாவது:
நான் முகநுால் உட்பட, எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு வைத்திருக்கவில்லை. என் பெயரில் போலியான கணக்கு துவக்கி, தவறான கருத்துகளை வெளியிட்டு, சமூதாயத்தின் அமைதியை குலைக்க முயற்சிக்கின்றனர்.
போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, விஷமிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement