வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட மூவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி பழையபேட்டையில், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி மையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஞானப்பிரகாசம் தனது பணப்பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்த மனு விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் பரிசீலிக்குமாறு 2012ல், உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்றம், 2019ல் தள்ளுபடி செய்தது.
2012 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த பிரதீப் யாதவ், முத்து பழனிசாமி, பூபால ஆண்டோ ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஞானப்பிரகாசம் மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பிரதீப் யாதவ், முத்து பழனிசாமி, பூபால ஆண்டோ ஆகிய மூவருக்கும் இரு வாரங்கள் சாதாரண சிறை தண்டனை, தலா, ரூ. 1,000 அபராதம் விதித்து ஆக., 9க்குள் உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் முன் சரணடைய உத்தரவிட்டார்.
இந்நிலையில் தண்டனையை நிறுதி வைக்க கோரி மூவர் சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை ஏற்ற சுந்தர், பாரசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, தண்டனையை நிறுத்தி வைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement