Kavin:இவங்க தான் கவினின் வருங்கால மனைவி, தாய்க்கிழவி: என்ன வேலை பார்க்கிறாங்க தெரியுமா?

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கவின். சின்னத்திரையில் இருந்து வந்தாலே பெரியதிரையில் சாதிப்பது கடினம் என்கிற பேச்சு உண்டு.

சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்
இந்நிலையில் தான் கவின் கஷ்டப்பட்டு ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் படம் கொடுத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தாராம் கவின். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டாடா படம் சூப்பர் ஹிட்டானது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் டாடாவை பிடித்துவிட்டது. இதையடுத்து திருமணத்திற்கு தயாராகி வருகிறார் கவின். அவருக்கும், மோனிகா டேவிட் என்பவருக்கும் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருக்கும் பள்ளி ஒன்றில் வேலை செய்து வரும் மோனிகா டேவிட் தான் கவினின் தாய்க்கிழவியாம். அதாவது திருச்சிற்றம்பலம் படத்தில் எப்படி தனுஷும், நித்யா மேனனும் சிறு வயதில் இருந்து ஒன்றாகவே இருந்தாலும், காதலை உணராமல் இருந்தார்களோ அதே போன்று தான் கவினும், மோனிகாவும் இருந்தார்களாம்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் தனக்காக இருப்பதை உணராமல் பிற பெண்களை காதலிக்க முயற்சி செய்வார் தனுஷ். கவினும் அப்படித் தானாம். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கவினுக்கு காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த காதல் தொடரும் என நம்பப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு கவினின் காதல் முறிந்துவிட்டது. அது பற்றி கவின் எதுவுமே பேசவில்லை. அமைதியாக தன் வேலையை மட்டும் பார்த்து வந்தார். அதன் பிறகே மோனிகா டேவிட் தனக்காக இருப்பதை உணர்ந்தாராம்.

Jailer: நீங்க சொன்னது ரொம்ப தப்பு ‘ஜெயிலர்’ ரஜினிகாந்த்

காதலை வீட்டில் சொல்லி இரு தரப்பிலும் சம்மதம் வாங்கிவிட்டார்களாம். வரும் 20ம் தேதி நடக்கும் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வருகிறார்களோ இல்லையோ முதல் ஆளாக ஜெயலிர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கண்டிப்பாக வருவார்.

ஏனென்றால் நெல்சன் திலீப்குமாரிடம் உதவியாளராக வேலை செய்தவர் கவின். ஆம், கேமராவுக்கு பின்னாலும் நின்று சினிமா பற்றி கற்றுக் கொண்டிருக்கிறார்.

கவினுக்கு கல்யாணம் என அவரின் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் திருமணம் பற்றி கவின் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதையடுத்து கவினுக்கும், மோனிகாவுக்கும் நிஜமாகவே திருமணமா நெல்சா என நெல்சன் திலீப்குமாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கவின் வாழ்க்கையில் ஒரு வழியாக எல்லாம் நல்லதாக நடந்து வருகிறது. இந்த திருமணம் நல்லபடியாக நடக்கணும். இந்த காலத்தில் இப்படியொரு பெண் கிடைப்பது கடினம். கவின் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டதில் கலந்து கொண்டவர் மோனிகா. கவினுக்கு துணையாக இருந்து ஆறுதல் கூறி தேற்றியவர்.

இத்தனை ஆண்டுகளாக மோனிகாவின் காதல் எப்படி கவினுக்கு புரியாமல் போனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சரி, அது அதுக்கு நேரம் வந்தால் தானே நடக்கும். கவினுக்கு இப்பொழுது தான் நேரம் வந்திருக்கிறது என ரசிகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.