உதயநிதிக்கு கை மாறும் முக்கிய பொறுப்புகள்: ஸ்டாலின் போடும் கணக்கு?

தலைமை வகிக்கும் திமுக இளைஞரணியில் புதிதாக நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர்

கலந்து கொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்.

“எனக்கு நிம்மதி வந்துருச்சி, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று மேடையில் ஸ்டாலின் பேசியது திமுகவினரை உற்சாகமடையச் செய்தது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதிலிருந்தே 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஒற்றை செங்கலை வைத்து அதிமுக – பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இவையனைத்தையும் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் உதயநிதியை வாழ்த்தியதோடு அவரை போல செயல்பட வேண்டும் என்று திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தினார்.

மாணவர்கள் இளைஞர்களுக்கு கழகத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது

முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேசியதன் பின்னணி குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதையும் தட்டி தூக்கினால் மட்டுமே மக்கள் நம் ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் வைத்துள்ளார்கள் என்று கருத முடியும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் மக்களிடம் அரசின் திட்டங்களை நினைவூட்டினாலே வெற்றி உறுதியாகிவிடும். அதே சமயம் யாரும் வில்லங்கமாக பேசி வருகிற வாக்குகளை தடுக்காமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையில் ஸ்டாலின் இருக்கிறாராம்.

எனவே மூத்த அமைச்சர்கள் சிலர் மைக் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். உதயநிதியை மட்டும் மாநிலம் முழுக்க அனுப்பி வாக்கு சேகரிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இளைஞரணி சார்பாக பிரம்மாண்ட மாநாடு நடத்தும் உதயநிதி அதன்பின்னர் மாநிலம் முழுவதும் பறக்க உள்ளாராம்.

தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டால், உதயநிதிக்கு ஆட்சியில் கூடுதல் பொறுப்புகள் வழங்கி, ஸ்டாலின் கொஞ்சம் ஓய்வெடுக்கவும் திட்டம் தீட்டப்படுவதாக சொல்கிறார்கள் சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.