திருப்பதி: திருப்பதி தேவஸ்தான தலைவர் தேவேந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பதியில் ஜூலை மாதம் ரூ.129.08 கோடி வருமானம் வந்துள்ளது. 1.10 கோடி லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன. 56.68 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 9.74 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்துள்ளனர். ஜூலை மாதம் முடியை விற்றதன் மூலம் ரூ.104 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஸ்ரீவாரி தரிசனம் மூலம் உண்டியல் வருமானமாக ரூ.4.44 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அப்போது 26,936 பேர் முடி காணிக்கை செய்துள்ளனர்.
நேற்று மட்டும் திருப்பதியில் 59,898 பேர் தரிசனம் செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement