புதுடில்லி,:அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலுக்கு விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
மோடி என்ற பெயர் குறித்து, 2019ம் ஆண்டு ராகுல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ராகுலின் லோக்சபா எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர் வெற்றி பெற்றிருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுலுக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ ராகுலுக்கு எதிரான அநியாயமான அவதுாறு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.
இந்தத் தீர்ப்பு, நம் நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. ராகுலுக்கும், வயநாடு தொகுதி மக்களுக்கும் வாழ்த்துகள்,” என, கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement