Samantha: பிரபல தெலுங்கு நடிகரிடம் ரூ. 25 கோடி கடன் வாங்கிய சமந்தா?

பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் சமந்தாவுக்கு ரூ. 25 கோடி கடன் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

​சமந்தா​மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் மேல் சிகிச்சை பெற வசதியாக நடிப்பில் இருந்து 6 மாத காலம் பிரேக் எடுத்திருக்கிறார். பிரேக் எடுத்த கையோடு தன் தோழியுடன் இந்தோனேசியாவுக்கு சென்று ஊர் சுற்றிப் பார்த்தார். இந்நிலையில் சமந்தா பற்றி தெலுங்கு ஊடகங்கள் ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.ரஜினி​சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்ணா கேட்டு வாங்குங்க கொதித்த ரஜினி ரசிகர்​ரூ. 25 கோடிமேல் சிகிச்சை பெற அமெரிக்கா செல்கிறார் சமந்தா. சிகிச்சை செலவுக்காக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல ஹீரோ ஒருவர் ரூ. 25 கோடி கடனாக கொடுத்திருக்கிறார் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நடிகர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த தகவலை சமந்தா உறுதி செய்யவில்லை.
​அமெரிக்கா​பாலி வெகேஷனுக்கு பிறகு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறாராம் சமந்தா. ஆனால் சமந்தாவிடம் இல்லாத பணமா?. அவர் ஏன் வேறு யாரிடமோ கடனம் வாங்க வேண்டும். கையில் காசு இல்லாமல் இருந்தால் அவர் எப்படி தோழியுடன் பாலிக்கு சென்றிருப்பார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
​வெகேஷன்​இந்தோனேசியாவுக்கு சென்றதில் இருந்து தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார் சமந்தா. மேலும் 4 டிகிரி செல்சியஸ் குளிரில் ஐஸ் பாத் எடுத்தார். அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டார். தன் தோழியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவையும் போஸ்ட் செய்திருந்தார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

​Samantha: இந்தோனேசியாவில் 4 டிகிரி குளிரில் 6 நிமிடம் ஐஸ் பாத் எடுத்த சமந்தா: பதறிய ரசிகர்கள்

டான்ஸ்​View this post on InstagramA post shared by Samantha (@samantharuthprabhuoffl)​​குஷி​பிரேக் எடுப்பதற்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்தார். காதல் படமான அது விஜய்க்கும், சமந்தாவுக்கும் நிச்சயம் கை கொடுக்கும் என நம்பப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. குஷி தவிர்த்து ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்திருக்கிறார் சமந்தா.

​Vijay: காக்க காக்க படத்தில் நடிக்க மறுத்த விஜய்: இதெல்லாம் ஒரு காரணமானு கேட்கும் ரசிகர்கள்

​சிடாடல்​சிடாடல் வெப்தொடர் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அதில் உளவாளியாக நடித்திருக்கிறார் சமந்தா. அந்த தொடரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். அதில் எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருக்கிறார். சிடாடலில் நடித்தபோது ஐஸ் பாத் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு டார்ச்சர் என்றார். அதை பார்த்து ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.
​கோவில்கள்​பிரேக் எடுத்த உடன் முதல் வேலையாக வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்தார் சமந்தா. அதன் பிறகு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டினார். அதற்கும் முன்பு பழனி முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டார். சமந்தா இப்படி கோவில் கோவிலாக செல்வதை பார்த்த ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

​Samantha: உடல்நலம் சரியாகணும்: பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற சமந்தா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.