Thalaivar 170: 'தலைவர் 170' பட லுக்கா.?: மாஸான புதிய கெட்டப்பில் கெத்துக்காட்டும் ரஜினி.!

‘ஜெயிலர்’ படம் சிறப்பாக வந்துள்ள மகிழ்ச்சியில் உற்சாகமாக உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த வாரம் இந்தப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’ படத்தினை தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்தினை த.செ. ஞானவேல் இயக்கவுள்ளார்.

சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. த.செ. ஞானவேல் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீசான இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை குவித்த நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதான வரவேற்பினை பெற்றது. இருளர் பழங்குடியினர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் இந்த சமுதாயத்தில் நடத்தப்படும் விதம் குறித்தும் அழுத்தமாக பதிவு செய்து ‘ஜெய் பீம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தார் த.செ. ஞானவேல்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது ரஜினி, த.செ. ஞானவேல் கூட்டணி அமைந்துள்ளது. லைகா தயாரிப்பில் இந்தப்படம் உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கான முக்கியமான வேலையை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ‘தலைவர் 170’ படத்திற்கான லுக் டெஸ்ட்டை அவர் நிறைவு செய்துள்ளதாக இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளன.

தாடியை ட்ரிம் செய்து அட்டகாசமான புதிய தோற்றத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ‘தலைவர் 170’ படத்திற்கான லுக் இதுதானா எனக்கேட்டு ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Raveena Ravi: இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கலை: ‘மாமன்னன்’ ரத்னவேல் மனைவி உருக்கம்.!

அத்துடன் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக, போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் நபராக ரஜினி இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘தலைவர் 170’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல் பிரபல தெலுங்கு நடிகரான நானியும் இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை போல் இதிலும் டார்க் காமெடியுடன் ஆக்ஷன் கலந்து இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

STR 48: சிம்புவுக்காக களமிறங்கும் ஆண்டவர்.. முரட்டு சம்பவம்: எதிர்பாராத ட்விஸ்ட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.