சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… இது புதுசு… ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ்!

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்களை ”அம்ரீத் பாரத்” திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகளை பிரதமர் மோடி நாளைய தினம் (ஆகஸ்ட் 6) தொடங்கி வைக்கிறார். இதே நாளில் மற்றொரு சிறப்பு வாய்ந்த ரயில் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், கடந்த சில வாரங்களாகவே இந்த தேதியை நோக்கி எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

​தமிழகத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஏற்கனவே சென்னை டூ மைசூரூ, சென்னை டூ கோயம்புத்தூர் என இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதையடுத்து 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கூடவே சென்னை டூ விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை மொத்தம் 650 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. இதை 8 மணி நேரத்திற்கு கடந்துவிடும். அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மினி வந்தே பாரத் 2.0 எக்ஸ்பிரஸ்விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இவை இரண்டாம் தலைமுறையை சேர்ந்த மினி வந்தே பாரத் 2.0 எக்ஸ்பிரஸ் ரயில் வகையை சேர்ந்தது. மொத்தம் 8 பெட்டிகள் இருக்கும்.
எந்தெந்த வழித்தடங்கள்அதில் 7 ஏசி சேர் காரும், ஒரு பெட்டி எக்ஸிகியூடிவ் சேர் காரும் இடம்பெற்றிருக்கும். சென்னை எழும்பூரில் புறப்பட்டு நெல்லை செல்லும் வழித்தடத்தில் திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு புதிய ரயில் சேவைகள்ஒருவேளை நாளைய தினம் மிஸ்ஸானாலும் அடுத்த சில வாரங்களில் சென்னை டூ நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். அடுத்தகட்டமாக சென்னை சென்ட்ரல் டூ செகந்திராபாத், சென்னை எழும்பூர் டூ கன்னியாகுமரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே மெட்ரோ டூ வந்தே சாதரன் வரைஇதுதவிர வந்தே மெட்ரோ என்ற பெயரில் சென்னை டூ திருப்பதி வரை குறுகிய தூர ரயில் சேவையை கொண்டு வர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மேலும் வந்தே பாரத் படுக்கை வசதிகள் உடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஏசி அல்லாத வந்தே சாதரன் வகையில் ரயில்கள் உள்ளிட்டவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.