சென்னை என்றுமே இந்தி திணிப்பை தமிழகம் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உறையில், “அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்குப் போட்டி மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். […]
