நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்… பாமக யாரோடுகூட்டணி ? போட்டுடைத்த அன்புமணி!

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று

. சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து அக்கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர்

தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது.

அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர், காவல்துறையினர் மீதும் காவல்துறை வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிறார். நெல்லை மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை நேற்று அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக தொண்டர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

சிறையில் உள்ள பாமகவினரை சந்தித்த அன்புமணி

அப்போது பாமக மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக கூறினார். ஆனால் தமிழகத்தில் அந்த கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை என்றும் அன்புமணி தெரிவித்தார். மேலும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஒருமித்தக் கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து பாமக தேர்தலை எதிர்க்கொள்ளும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அதனை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணியில் பங்கேற்க பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.