ஹீரோவான ஈரோடு டாக்டர்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். 90 சதவிகிதம் பேர் அந்த ஆசையை மனதுக்குள் பூட்டி வைத்து விடுவார்கள், சிலர் தானாக வாய்ப்பு வரும் என்று காத்திருப்பார்கள், சிலர் வாய்ப்பு தேடுவார்கள், சிலர் ஜெயிப்பார்கள், பலர் தோற்பார்கள்.

குறிப்பாக டாக்டர்களிடையே ஆக்டராகும் ஆசை அதிகமாகவே இருக்கிறது. ஏற்கெனவே பல டாக்டர்கள் சினிமாவில் நடித்து வரும் நேரத்தில் ஈரோட்டை சேர்ந்த இளம் டாக்டர் ஆதித் சுந்தரேஸ்வரரும் நடிகராகி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ‛‛எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். எங்கள் தலைமுறையின் முதல் டாக்டர் நான் தான். மெரிட்டில் தேர்வாகி சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தேன். அப்போது உடன் படித்த மாணவர்கள் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசையை தூண்டினார்கள். இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்தேன். நடனம், நடிப்பு கற்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வசனமே இல்லா அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்தேன்.

‛தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தேன். அதன் மூலம் பல குறும்பட வாய்ப்புகள் கிடைத்தது. மிஷ்கின் உதவியாளர் மீனா குமாரி இயக்கிய 'பாசு பேபி' என்ற வெப் தொடரில் நடித்தேன். 'நேற்று நீ இன்று நான்' படத்தில் ஹீரோவாக நடித்தேன். தற்போது சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதோடு 'ஆயிரம்கால் மண்டபம்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.