சிறந்த மைலேஜ்… ரூ. 5 லட்சத்தை விட குறைவான விலை: அசத்தல் கார்களின் பட்டியல் இதோ

இந்தியாவின் சிறந்த பட்ஜெட் மைலேஜ் கார்கள்: தனக்கென ஒரு கார் இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஒரு கனவாக உள்ளது. ஆனால், பலரிடம் கார் வாங்க மொத்தமாக ஒரு பெரிய தொகை இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்று மாதா மாதம் இஎம்ஐ மூலம் கடனை திருப்பி செலுத்துகிறார்கள். நீங்களும் கார் வாங்க திட்டமிட்டு, ஆனால் அதற்கான உங்கள் பட்ஜெட் அதிகம் இல்லை என்றால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சந்தையில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். விலை குறைவாக இருந்தாலும், இவற்றில் நல்ல மைலேஜ் கிடைக்கும். இந்த கார்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10

பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகியின் ஆல்டோ கே10 ஆகும். மாருதி நிறுவனம் இதை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தலைமுறை ஆல்டோவின் விலை ரூ. 3.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த செக்மெண்டில் இந்த காரில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் காணப்படுகிறது. மைலேஜ் பற்றி பேசுகையில், பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 24.9 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். வாடிக்கையாளர்களுக்கு அதன் சிஎன்ஜி வேரியண்டில் அதிக மைலேஜ் கிடைக்கும். ஆனால் பெட்ரோல் மாறுபாட்டுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி பதிப்பின் விலை சற்று அதிகம்.

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ

பட்டியலில் இரண்டாவது கார் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ ஆகும். இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 4.26 லட்சம். நிறுவனம் அதை கடந்த ஆண்டுதான் புதுப்பித்துள்ளது. S-Presso 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது. இந்த காரிலும் வாடிக்கையாளர்கள் பல வித அம்சங்களை பெறுவார்கள். மறுபுறம், மைலேஜ் பற்றி பேசுகையில், பெட்ரோல் மாறுபாட்டில் லிட்டருக்கு 25.3 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. அதேசமயம் இதன் சிஎன்ஜி மாறுபாடு அதிக மைலேஜ் தருகிறது.

ரெனால்ட் க்விட்

பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி கார் ரெனால்ட் க்விட் ஆகும். குறைந்த பட்ஜெட் கார்களில் இந்த கார் சிறந்த தேர்வாகவும் உள்ளது. க்விட் விலை பற்றி பேசினால், இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4 லட்சத்து 70 ஆயிரம். இந்த காரில் பல அம்சங்களுடன் நல்ல மைலேஜ் கிடைக்கும். க்விட் கார் லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் கொடுக்கிறது. 

கூடுதல் தகவல்

ஜூன் மாத கார் விற்பனை

ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 கார்களில் மாருதி சுஸுகி 6 கார்களையும், ஹூண்டாய் 2 கார்களையும், டாடா மோட்டார்ஸ் 2 கார்களையும் கொண்டுள்ளன. இதில் வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா, ஆல்டோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகியவை அடங்கும். இந்தப் பட்டியலைப் பார்த்து, எந்தக் கார் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். முதல் 10 கார்களின் பட்டியலில் பல பெரிய ஏற்ற இறக்கங்கள் உள்ளன.

ஜூன் 2023 இல் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் பட்டியல்:

மாருதி சுஸுகி வேகன்ஆர் – 17,481 யூனிட்கள்
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் – 15,955 யூனிட்கள்
ஹூண்டாய் க்ரெட்டா – 14,447 யூனிட்கள்
மாருதி சுஸுகி பலேனோ – 14,077 யூனிட்கள்
டாடா நெக்ஸான் – 13,827 யூனிட்கள்
ஹூண்டாய் வென்யூ – 11,323 யூனிட்கள்
மாருதி சுஸுகி ஆல்டோ – 11,323 யூனிட்கள்
டாடா பஞ்ச் – 10,990 யூனிட்கள்
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா – 10,578 யூனிட்கள்
மாருதி கிராண்ட் விட்டாரா – 10,486 யூனிட்கள்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.