விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் சபாநாயகர் சம்ஷேர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரளாவில் உள்ள ஈழவா சமூகத்தின் ஆன்மிக மையமான சிவகிரி மடம், இந்த விவகாரத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, மடத்தை நிர்வகிக்கும் ஸ்ரீ நாராயண தர்ம சங்க அறக்கட்டளையின் தலைவர் சச்சிதானந்த சுவாமிகள் கூறியதாவது:
விநாயகரை பற்றிய கருத்துகள் மற்றும் சடங்கு முறைகள் குறித்து பேசியது தான் பிரச்னை. சபாநாயகரின் கருத்துகள், பல்வேறு தரப்பினரை புண்படுத்தியுள்ளன. எனவே, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகிரி மடம் கண்டனம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement