ஹத்ராஸ்:உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா கோவிலுக்கு சென்ற போது, ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு சிறுமி உட்பட ஆறு பக்தர்கள் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உ.பி.,யின் ஜலேசர் நகரில் இருந்து மதுராவில் அமைந்துள்ள கோவர்தனுக்கு டிராக்டரில் நேற்று, 45 பேர் சென்றனர்.
ஹத்ராஸ் அருகே சதாபாத் சாலையில் எதிரே வந்த லாரி, டிராக்டர் மீது அசுரவேகத்தில் மோதியது. டிராக்டரில் இருந்த பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், விக்ரம்,45, மாதுரி,22, ஹேமலதா,12, லக்மி,18, அபிஷேக்,20, விஷ்ணு,20, ஆகிய ஆறு பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
காயம் அடைந்தவர்களுக்கு சதாபாத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டது.
பி ன், அவர்கள் ஹத்ராஸ் மாவட்ட மருத்துவமனை, அலிகார் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆக்ரா எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார், லாரி டிரைவர் மற்றும் உதவியாளர்கள் இருவர் என மூன்று பேரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதியநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்