கண்ணா ஐபோன் மேல ஆசையா? அமேசான் அதிரடி ஆஃபரில் ஐபோன் 14 சூப்பர் தள்ளுபடி

அமேசான் கிரேட் ஃப்ரீடம் டே விற்பனையானது ஐபோன் 14 ரசிகர்களுக்கு தள்ளுபடி மூலம் கனவுகளை நனவாக்க சூப்பரான வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த அமேசான் ஆஃபருக்கான விற்பனைக்கு தான் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். இப்போது எதிர்பார்த்ததுபோலவே விற்பனை தொடங்கியுள்ளது. இதில் ஐபோன் 14 மாடலில் மிகப்பெரிய தள்ளுபடி காணப்படுகிறது. நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் இந்த மாடலை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். நீங்களும் இந்த மாடலை வாங்க தயாரானால், எப்படி விலை குறைவாக வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஐபோன் 14-ல் தள்ளுபடி

ஐபோன் 14 தள்ளுபடியைப் பொறுத்தவரையில், 128 ஜிபி மற்றும் நீல நிற வேரியண்ட் மொபைல் அசல் விலையில் இருந்து குறைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான நாட்களில் இந்த மொபைலின் விலை ரூ. 79,900. ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சலுகையின் கீழ், இந்த மாடல் ரூ. 79,900-க்கு அல்ல, 16% தள்ளுபடியுடன் வெறும் ரூ.67,499 க்கு வழங்கப்படுகிறது. அதாவது 12, 500 ரூபாய் அடிப்படை விலையில் இருந்தே குறைத்து கொடுக்கப்படுகிறது. இதுதவிர வங்கிச் சலுகைகள் உள்ளன. 

ஐபோன் 14 வங்கிச் சலுகை

நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய்க்கு 10% தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடி EMI-ல் கிடைக்கும். இதனுடன், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் EMI அல்லாத பரிவர்த்தனைகளைச் செய்யும்போது, ​​10% அதிகபட்சமாக ரூ.750 உடனடி தள்ளுபடி வழங்கப்படும். கூடுதல் சலுகையின் கீழ், SBI கிரெடிட்டிலிருந்து 9 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட EMI பரிவர்த்தனைகளைச் செய்யும் உங்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு விருப்பங்களைப் பெறுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பை ஆதரிக்கிறது மற்றும் இ-சிம் விருப்பத்தையும் கொண்டுள்ளது. ஐபோன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. நல்ல வசதிகளுடன், குறைந்த விலையில் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.