காவிரி வரலாறு தெரியுமா மத்திய அமைச்சரே? இதுல ஓபிஎஸ் வேற பாவம்… துரைமுருகன் விட்ட பளார்!

தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டால் ஏற்பட்ட மோதல் என்பது பல ஆண்டுகால வரலாறு. இன்னும் கூட உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாமல் கர்நாடகா அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து டெல்லிக்கு கடிதம் எழுதுவதும், நேரில் சென்று வலியுறுத்துவதும் என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி.

தேசிய அரசியலில் சக்கர வியூகம் அமைக்கும் திமுக : துரைமுருகன்

காவிரி விவகாரம்

இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள். ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காவிரி நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகா எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலாண்மை வாரியம்

ஆனால், நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை பகிர்ந்து கொள்வதை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இது மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவே தான் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகாவை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்கிறோம். இதை செய்ய வேண்டும் என்று தான் தமிழக முதலமைச்சர்

பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

துரைமுருகன் பதிலடி

இந்த சூழலில் தான் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ”பேச்சுவார்த்தை” என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். உங்களுக்கு காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை. 1967 முதல் 1990 வரை இந்த பிரச்சினை குறித்து பேசி பேசி எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. இதையடுத்து காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. இது தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கியது.

என்ன ஒரு வேடிக்கை

எனவே இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை என்பதற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்வது போல ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கை. இதில் இன்னொரு வேடிக்கை இருக்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

இனி உச்ச நீதிமன்றம் தான்

இவர் தனது அறிக்கையில், கர்நாடக மாநில முதல்வரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் பேசி ஸ்டாலின் தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பேச்சு வார்த்தைக்கே இடமில்லை. அதனால் தான் நடுவர் மன்றம் போனோம். அங்கிருந்து தீர்ப்பை பெற்றோம்.

பாவம் ஓபிஎஸ்

இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கர்நாடகா மாநிலத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுவது காவிரி பிரச்சினையின் அடிப்படை வரலாறே தெரியவில்லை என்று அர்த்தம். பாவம், அரசியல் பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம் பெரிதும் குழம்பிப் போய் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.