சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினேனா? – சமந்தா விளக்கம்

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வந்த குஷி படத்தை முடித்துள்ள சமந்தா, தற்போது தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள தசை அழற்சி நோய் சிகிச்சைக்காக ஒரு பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் அவர் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதற்கு தனது சமூக வலைதளத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் சமந்தா.

அவர் கூறுகையில், மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக ஒரு நடிகரிடத்தில் நான் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பதோடு எனக்கென்று தொழில் இருப்பதால் எனது தேவைகளை என்னால் கவனித்துக் கொள்ள முடியும். என்னைப் போலவே இந்த நோயினால் ஆயிரக்கணக்கானோர் அவதிப்பட்டு வருகிறார்கள். அதோடு இந்த நோய் சிகிச்சைக்கு இவ்வளவு பெரிய தொகை எல்லாம் தேவைப்படாது என்றும் ஒரு விளக்கம் கொடுத்து, தன்னைப்பற்றி பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.