நந்தினி பால் இனிமே எக்ஸ்ட்ரா 10 மி.லி… KMF போட்ட பலே திட்டம்… என்ன காரணம் தெரியுமா?

ஆகஸ்ட் 1 முதல் நந்தினி பால் விலை உயர்ந்தது. இது கர்நாடகா மக்கள் அனைவருக்கும் தெரியும். மாநில அரசின் அதிகாரப்பூர்வ பிராண்டாக விளங்கும் நந்தினி பால் பொருட்களுக்கு நல்ல மவுசு உண்டு. நம் மாநிலத்தில் ஆவினுக்கு இருக்கும் தரம் போல, கர்நாடகாவில் நந்தினி தான் டாப். விஷயத்திற்கு வருவோம். நந்தினி பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து ப்ளூ பாக்கெட் அரை லிட்டர் 21.5 ரூபாயாக உயர்ந்தது.

நந்தினி பால் விற்பனைஇதனால் 50 காசுகள் சில்லறை தருவதில் கடைக்காரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதேபோல் ஸ்பெஷல் சுபம் பால் (ஆரஞ்சு) அரை லிட்டர் 24 ரூபாயாக உயர்ந்தது. இதனால் ஒரு ரூபாய் சில்லறை சிக்கல் வந்தது. காலை பொழுதில் கடைக்காரர்களால் எப்படி அனைவருக்கும் சில்லறை தர முடியும். சிலர் அப்புறம் வாங்கி கொள்ள தயாராக இல்லை. சில்லறையை வேறு பொருளாகவும் வாங்கிக் கொள்ளவும் முடியாது.விலையை ரவுண்ட் செஞ்ச கூட்டமைப்புஇதனால் டென்ஷன் பார்ட்டிகள் எகிறி வாக்குவாதமான சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. இந்த விஷயம் கர்நாடகா பால் கூட்டமைப்பிற்கு (KMF) தெரியவந்தது. இதற்கு எப்படி தான் தீர்வு தருவது என தீயாய் யோசித்த கூட்டமைப்பினர், சில்லறைக்கு பதில் எக்ஸ்ட்ரா பால் கொடுத்தால் என்ன? என திட்டமிட்டுள்ளனர். அதாவது விலையை ரவுண்ட் செய்துவிட்டு அதற்கேற்ப பாலின் அளவில் சற்றே உயர்த்தி வழங்குவது.
10 மில்லிலிட்டர் கூடுதல் பால்இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமெனில் மேலே சொன்ன ப்ளூ பாக்கெட் நந்தினி பால் அரை லிட்டர் 22 ரூபாயாகவும், ஆரஞ்சு பாக்கெட் ஸ்பெஷல் சுபம் பால் 25 ரூபாயாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதற்கேற்ப 500 மில்லிலிட்டரில் 10 மில்லிலிட்டர் பால் கூடுதலாக சேர்த்து பேக்கிங் செய்து விடுவது. இதுதான் திட்டம். இந்த விஷயத்தை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொன்னால் யார் தான் ஏற்றுக் கொள்வர். ஒருவரும் நம்ப மாட்டார்கள்.
KMF பிளான் சக்சஸ்எனவே அனைவருக்கும் தெளிவாக தெரியும்படி பால் பாக்கெட்டில் எக்ஸ்ட்ரா 10 மில்லிலிட்டர் சேர்க்கப்பட்டுள்ளது என அச்சிட்டுள்ளனர். இதை பார்த்ததும் கொடுத்த காசுக்கு சரியான அளவில் பொருள் கிடைத்தால் நல்லது தான் என்று வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவழியாக சாமர்த்தியமாக யோசித்து நந்தினி பால் விற்பனையில் ஏற்பட்ட சலசலப்பிற்கு அம்மாநில பால் கூட்டமைப்பினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
​ரூ.5 இல்ல ரூ.3 மட்டும் தான்இந்நிலையில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்த பால் விலை உயர்வு குறித்து தெரிந்து கொள்ளலாம். பால் கொள்முதல் விலை, மின் கட்டணம், மாடுகளுக்கு தீவின விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகா பால் கூட்டமைப்பு நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த மாநில அரசுக்கு வலியுறுத்தினர். ஆனால் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 3 ரூபாய் வரை மட்டுமே விலை உயர்த்த முடிவு செய்தது.
​ஆகஸ்ட் 1 முதல் விலை உயர்வுஅதன்படி, விலை உயர்வு அமலுக்கு வந்த நிலையில் Toned Milk ஒரு லிட்டர் 39ல் இருந்து 42 ரூபாயாகவும், Homogenised Milk 40ல் இருந்து 43 ரூபாயாகவும், Pasteurised Milk 43ல் இருந்து 46 ரூபாயாகவும், Shubham Special Milk 45ல் இருந்து 48 ரூபாயாகவும் அதிகரித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.