மாண்டியா : பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையில் வேகத்தை கண்டுபிடிக்கும் கேமராக்கள் வைத்து, அபராதம் வசூலிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுப்பதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஆனாலும் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த சாலையின் இடது புறத்தில் 60 கி.மீ., வேகத்திலும், மத்தியில் 90 கி.மீ., வேகத்திலும், வலது புறத்தில் 100 கி.மீ., வேகத்திலும் செல்வதற்கு மட்டுமே வேக கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பல வாகனங்கள் 160 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் செல்வதால் தான் விபத்துகளும் அதிகமாக நடப்பது தெரிய வந்துள்ளது. எனவே, 10 கி.மீ., துாரத்துக்கு ஒரு கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு வேகம் கண்காணிப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக இயக்கும் வாகனங்களை நிறுத்தி, அபராதம் விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இதையும் மீறி இடையிடையே தடை செய்யப்பட்ட வாகனங்கள் நுழைந்து விடுகின்றன. நேற்று வரை 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 62 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement