வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி வரும் 12 ம் தேதி நடைபெறும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் வெல்லப்போது யார் என்ற பரபரப்பு ஆரம்பாகி உள்ளது.
![]() |
பா.ஜ.,எம்.பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருபவர் பிரிஜ் பூஷன் சிங். இவர் 12 ஆண்டுகளாக தொடர்ந்து மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார் மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி 6 மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு ஆகஸ்ட் 12 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர், மூத்த துணைத் தலைவர்,4 துணைத் தலைவர், பொதுச் செயலாளர்,), பொருளாளர், 2 இணைச் செயலாளர் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு 4 பேரும், மூத்த துணைத் தலைவர் பதவிக்கு 3 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 6 பேரும், பொதுச் செயலாளர் பதவிக்கு 3 பேரும், பொருளாளர் பதவிக்கு 2 பேரும், இணைச் செயலாளர் பதவிக்கு 4 பேரும், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்டபதவிகளுக்கு 15பேர் வரையில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளரான துஷ்யந்த் சர்மா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அரியானா மாநிலத்தை சேர்ந்த அனிதா ஷியோரன் போட்டியிடுகிறார். இவர் ஓடிசா மாநிலத்திற்காக விளையாடி வருகிறார். மேலும் உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஜெய் பிரகாஷ் என்பவர் துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்களை தவிர பொதுச் செயலாளர் பதவிக்கு மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களில் இருவர் பிரிஜ் பூஷன் முகாமைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தர்ஷன் லால் மற்றும் சண்டிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் டபிள்யூ.எப்.ஐ-இன் துணைத் தலைவருமான ஜெய் பிரகாஷ் ஆகியோர் அடங்குவர். மூன்றாவது வேட்பாளர் பிரேம் சந்த் லோச்சப், அவர் ரயில்வே விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார். பொருளாளர் பதவிக்கு சத்யபால் சிங் தேஷ்வால் மற்றும் துஷ்யந்த் சர்மா ஆகிய இரு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேஷ்வால் உத்தரகாண்ட் பகுதியைச் சேர்ந்தவர், பிரிஜ் பூஷன் முகாமைச் சேர்ந்தவர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தலை முன்னின்று நடத்த உள்ளவரும் தேர்தல் அதிகாரியுமான ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மகேஷ் மிட்டல் குமார், 15 பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். நாளை (7 ம் தேதி ) வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
![]() |
பல்வேறு பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பெரும்பாலானோர் பா.ஜ.,எம்.பி., பிரிஜ்பூஷனின் ஆதரவாளர்களாக இருப்பதால் தலைவர் பதவி போட்டியிடுவோரில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement