அய்ன் துபாய்… வந்தது மெகா அப்டேட்… திறக்கப்படும் தேதியும், சர்ப்ரைஸ் ஆஃபரும்!

திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றி விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. கிராமங்களில், பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம். அதுவும் சிறியதாக அல்லது சற்றே பெரியதாக இருக்கும். அதிகபட்சம் 20, 30 பேர் வரை அமரலாம். இதை பிரம்மாண்டமாக கட்டமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளை செய்து வருகின்றன.

அய்ன் துபாய் ராட்சத ராட்டினம்அதில் ஒருபடி மேலே சென்று உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு ராட்டினத்தை கட்டமைத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அங்குள்ள துபாய் நகரில் அய்ன் துபாய் ராட்சத ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 1,400 பேர் அமர முடியும். ஒருமுறை ராட்டினம் சுற்றி வருவதற்கு 48 நிமிடங்கள் வரை ஆகும். இதில் ஏறி உச்சிக்கு சென்றால் துபாயின் ஒட்டுமொத்த அழகையும் 360 டிகிரியில் ரசித்துவிடலாம்.6 ஆண்டுகால உழைப்புபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2021 அக்டோபர் மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதை வடிவமைக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனது. இந்த ராட்டினத்தின் அச்சு மட்டுமே 130 அடி நீளம் கொண்டது. அகலம் 65 அடி. வெளிப்புற சுழல் சக்கரத்தை இணைக்க 192 தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரையில் இருந்து உச்சி வரை 689 அடி உயரம் கொண்டிருக்கும்.
​திடீர் மூடல்இந்த ராட்டினம் பயன்பாட்டிற்கு வந்து சரியாக ஒரு வருடம் கூட ஆகவில்லை. 2022 மார்ச் மாதம் மூடப்பட்டது. என்ன காரணம்? மீண்டும் எப்போது திறக்கப்படும்? போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அங்கு ஏதோ பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் மட்டும் வெளியாகின. இந்நிலையில் அய்ன் துபாய் இணையத்தில் அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
​அதிகாரப்பூர்வ தகவல்அதில், அய்ன் துபாய் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். விரிவாக்க பணிகளை முடிக்க கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறோம். மீண்டும் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்ட உடன் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும். வேறெங்கும் கிடைக்காத வகையில் மிகச்சிறந்த அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.​திறக்கப்படும் தேதிஅய்ன் துபாய் மீண்டும் திறக்கப்பட்ட உடன் புதிய மற்றும் நம்ப முடியாத ஆஃபர்கள் வழங்கப்படும். இது உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் கொண்டாடி தீர்க்க உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகி இருக்கின்றன. தற்போதைய சூழலில் அய்ன் துபாய் ராட்சத ராட்டினம் திறக்கப்படாது. மீண்டும் திறக்கப்பட்டதும் புதிய சலுகைகளால் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தில் மூழ்குவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.