பாலக்காடு : பாலக்காடு அருகே, வாளையார் அணையில் மூழ்கி, இரண்டு கல்லுாரி மாணவர்கள் இறந்தனர்.
தமிழகத்தின் நாமக்கல் சங்கரமங்கலத்தைச் சேர்ந்த ஜகேந்திரன் மகன் ஷண்முகன், 18, இவரது நண்பர் திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த ராமர் மகன் திருப்பதி, 18.
இருவரும், கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
விடுமுறை நாளான நேற்று, இவர்கள் சக மாணவர்கள் ஆறு பேருடன், கோவை எல்லையில் உள்ள பாலக்காடு வாளையார் அணையை சுற்றிப்பார்க்க வந்தனர்.
பின்னர் அணையில் குளிக்க இறங்கியுள்ளனர். அப்போது, ஷண்முகன் மற்றும் திருப்பதி ஆகியோர் தாழ்வான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர்.
இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறினர். அப்பகுதி மக்களும், தகவலறிந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இரண்டு மணி நேரமாக தேடினர்.
பின், இருவரின் உடல்களை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement