
அட்லீ படத்தில் இணையும் வாமிகா கபி
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் தெறி. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அட்லீ மற்றும் பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் காளிஸ் இயக்குகிறார் .
இந்நிலையில் இப்போது ஹிந்தி நடிகை வாமிகா கபி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் மாலை நேரத்து மயக்கம், மாடர்ன் சென்னை லவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .