
கங்குவா படத்தில் இணைந்த ஜெகபதி பாபு
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி யூடியூப்பில் 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
தற்போது சென்னையில் உள்ள ஈ.வி.பி.யில் பிரமாண்ட அரங்கு அமைந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜ முந்திரியில் உள்ள காட்டு பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இணைகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே, திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, பாபி தியோல் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.