புதுடில்லி, பார்லி.,யின் லோக்சபாவில் அரசு ஊழியர்கள் குழந்தைகளை பராமரிப்பதற்கான விடுமுறை குறித்த கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் மற்றும் மனைவியின்றி தனியாக குழந்தைகளை பராமரிக்கும் ஆண் ஊழியர்கள், குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு தகுதி பெறுகின்றனர்.
முதல் இரண்டு குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் மொத்த பணிக்காலத்தின் போது, அதிகபட்சம் 730 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement