கொழும்பு, : இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் டெங்கு நோய் பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மழைக்கால நோய்கள் மிரட்ட துவங்கியுள்ளன. குறிப்பாக டெங்கு முழு வேகத்தில் பரவி வருகிறது. மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
அந்த பகுதியில் வசிப்போரில் 50 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 58 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்குவை தடுக்க சுகாதாரத்துறை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இருந்து நோய் தடுப்பு மருந்துகள், பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இலங்கை கோரியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement