Dont grow crops that require a lot of water | தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பயிரிட வேண்டாம்

மைசூரு : ”மைசூரு கோட்ட மாவட்டங்களில், நடப்பாண்டு வழக்கத்தை விட, 30 சதவீதம் குறைவாக பருவமழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை குறையும் வாய்ப்புள்ளது.

எனவே, தண்ணீர் அதிகம் பயன்படுத்தும் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டாம்,” என, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அறிவுறுத்தினார்.

மைசூரு நகர மண்டல ஆணையர் அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

பருவ மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இனி இதுபோன்று நடக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான இடத்தில் இருப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். உடுப்பி, தட்சிண கன்னடாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கால்வாய்கள், அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மைசூரு கோட்ட மாவட்டங்களில், நடப்பாண்டு வழக்கத்தை விட, 30 சதவீதம் குறைவாக பருவமழை பெய்துள்ளது. வரும் நாட்களில் மழை குறையும் வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீர் அதிகம் பயன்படுத்தும் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டாம்

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பேரிடர் மேலாண்மையிலும் முறைகேடு நடந்து வருகிறது. அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வறட்சி, வெள்ளம், கொரோனா போன்ற காரணங்களால், நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

பொது மக்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கு, 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்கள், சப் – டிவிஷன் அதிகாரிகளுக்கு உட்பட்டு வரும் நீதிமன்ற வழக்குகளை, முறைப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்தி விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மைசூரு கோட்ட வருவாய் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆலோசனை நடத்தினார். இடம்: மைசூரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.