மத்திய அரசின் பிரதம மந்திரியின் பாதுகாப்பு காப்பீடு திட்டம் (பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா) என்ற பெயரில் விபத்து காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லியால், 2015 ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டு, அந்தாண்டு மே 8 அன்று கொல்கத்தாவில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் என்பது ஒரு ஆண்டு தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாகும். ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டும். விபத்து காரணமாக இறப்பு அல்லது ஊனம் ஏற்பட்டால் அக்குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கின்றது.
இந்த விபத்து காப்பீடு திட்டத்தினை, புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசே இலவசமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான பிரிமிய தொகையை சமூக நலத் துறை மூலம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான விதிமுறைகளை சமூக நலத்துறை தற்போது உருவாக்கி உள்ளது. இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தை இறுதி செய்ய நிதி துறைக்கு கோப்பு அனுப்பியுள்ளது.
இத்திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ள வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயனடைய முடியும். விபத்தில் இறந்தவரது குடும்பத்திற்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் கிடைக்கும். நிரந்த ஊனம் என்றாலும் இத்தொகை கிடைக்கும். ஆண்டிற்கு வெறும் ரூ.20 செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கிகளை அணுகி ஆட்டோ டெபிட் மூலம் கணக்கில் பிரிமீயம் செலுத்தியும் சேர முடியும்.
மாநிலத்தில் மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன.
இதில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகளும், 1,86,397 சிவப்பு ரேஷன்காரடுகள் உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் சிவப்பு ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றுள்ள 4.84 லட்சம் பயனாளிகள் பயனடைய உள்ளனர். நிதி துறை ஒப்புதல் அளித்ததும், குடிமை பொருள் வழங்கல் துைறயிடம் சிவப்பு ரேஷன்கார்டு தகவல்கள் பெற்று இத்திட்டம் விரைவில் செயல்படுத்த சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement