ரோம், துனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளில் வறுமை, மோதல் போக்கு அதிகரித்து வருவதால், அங்கிருந்து பலர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்நிலையில், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புலம்பெயர்ந்தோர் இருந்த படகு இரு தினங்களுக்கு முன் சென்றது.
இது, ஆப்ரிக்க கடற்கரையின் கெர்கென்னா பகுதி அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது. மொத்தம் 51 பேர் இருந்ததாகக் கூறப்படும் படகு கடலில் கவிழ்ந்ததை அடுத்து, அதில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட, 41 பலியாகினர்.
நடுக்கடலில் தத்தளித்த இரண்டு ஆண்கள் உட்பட நான்கு பேரை, அவ்வழியாக சென்ற இத்தாலிய கப்பலின் ஊழியர்கள் மீட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்கிறது.
ஆப்ரிக்க கடலோர பகுதிகளில் தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் படகுகள் விபத்துகளில் சிக்கி வரும் சூழலில் ‘இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 20 வரை, துனிசிய கடலோர காவல்படை, நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தோரின் 901 உடல்களை மீட்டுள்ளது’ என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement