ஈக்வடாரில் எமர்ஜென்சி… நோட்டம் பார்க்கும் FBI… கொலம்பிய கும்பலுக்கு குறி… எகிறிய பதற்றம்!

தென் அமெரிக்காவில் உள்ள அமைதியான நாடு ஈக்வடார். ஆனால் தற்போது அப்படியான சூழல் இல்லை. துப்பாக்கிச்சூடு, படுகொலை, அவசரநிலை பிரகடனம், பதற்ற நிலையில் மக்கள் என பரபரப்பிற்கு பஞ்சமின்றி காணப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அந்நாட்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

190 நாடுகளின் தலைநகரம், கொடிகள், கரன்சி,மொழிகள் கூறி சிறுவன் அசத்தல்

அதிபர் வேட்பாளர் கொலை

இதையொட்டி தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக Build Ecuador Movement என்ற அரசியல் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளரும், முன்னாள் பத்திரிகையாளருமான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகர் குய்ட்டோவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு தனது காரில் ஏறச் சென்ற போது, மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ஈக்வடார் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாக்… அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொலை!

ஈக்வடார் அதிபர் கண்டனம்

இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு வயது 59. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஈக்வடார் நாட்டு அதிபர் குல்லெர்மோ லஸ்ஸோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பின்னணியில் இருப்பவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

2 மாதங்கள் எமர்ஜென்சி

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் தனது செய்தியில், ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஈக்வடார் நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் குல்லெர்மோ லஸ்ஸோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளை பிடிக்க அமெரிக்காவின் உளவுத்துறையான எஃப்.பி.ஐயின் உதவியை நாட்டியுள்ளார்.

போதைப் பொருள் கும்பல்

கடந்த சில ஆண்டுகளாக ஈக்வடார் நாட்டில் போதைப் பொருள் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் கொலை, திருட்டு, வன்முறை போன்றவை அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையில் தொடர் மோதல்களும் வெடித்து வருகின்றன. இவற்றின் பின்னணியில் கொலம்பியாவை சேர்ந்த சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவாய் தீவில் பகீர்… பேரழிவு, அணையாமல் எரியும் காட்டுத்தீ… ஜோ பைடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

கொலை மிரட்டல்

இவர்கள் தான் பெர்னாண்டோ வில்லவிசென்சியோவின் படுகொலைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இவர் கொல்லப்படுவதற்கு முன்பாக போதைப் பொருள் கும்பல்களிடம் இருந்து பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய பெர்னாண்டோ வில்லவிசென்சியோ, மாஃபியா கும்பலை சேர்ந்தவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி மிரட்டுகின்றனர்.

கொலம்பியர்கள் கைது

என்னை புல்லட் ப்ரூஃப் அணிந்து கொள்ள அறிவுறுத்துகின்றனர். ஆனால் அது எனக்கு தேவையில்லை. என்னை சுடுவதற்கு அவர்கள் வரட்டும். என்னை அவர்கள் வீழ்த்தலாம். ஆனால் ஒருபோதும் என் கொள்கைகளை உடைக்க முடியாது என்று பரபரப்பாக பேசியிருந்தார். இந்த சூழலில் கொலை சம்பவம் தொடர்பாக 6 கொலம்பியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈக்வடார் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவரை பிடிக்கும் முயற்சியின் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.