Dhanush: தனுஷ் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் ஹீரோ..அதுவும் தனுஷின் இயக்கத்தில்..பின்னணி இதுதானா ?

தனுஷிற்கு கடந்தாண்டு திரையுலகில் ஒரு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது எனலாம். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷிற்கு திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இப்படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கிலும் அறிமுகமானார். இவ்வாறு தொடர் வெற்றிகளை குவித்து வரும் தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற படத்தில் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தனுஷின் அக்கா மகன்

சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது தன் ஐம்பதாவது பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார்.

Nelson: விருது விழாவில் அவமானமா ? நடந்தது என்ன ? வெளிப்படையாக பேசிய நெல்சன்..!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். இப்படம் தான் தனுஷின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்குமாம். மேலும் எஸ்.ஜெ சூர்யா உள்ளிட்ட நடிகர்களை வைத்து ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இப்படத்தை உருவாக்கி வருகின்றார் தனுஷ்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனுஷின் குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோ அறிமுகமாக இருக்கின்றார் என தகவல்கள் வந்தது. தற்போது அதைப்பற்றி மேலும் விரிவான ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அன்புச்செழியன் தயாரிப்பில் தான் இப்படம் நடக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஹீரோவாக அறிமுகம்

இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை தனுஷே இயக்க இருக்கிறாராம். தன் ஐம்பதாவது படத்தை முடித்துவிட்டு தனுஷ் இப்படத்தின் வேலைகளை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோலிலும் நடிக்க இருக்கின்றார் எனவும் பேசப்பட்டு வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

தனுஷ் தன் அக்கா மகனை தானே இயக்க இருக்கின்றார் என்ற தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இருந்தாலும் இத்தகவல் உண்மையா இல்லை வதந்தியா என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.