வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :உத்தர பிரதேசத்தின் மதுராவில், கிருஷ்ண பிறந்த இடத்துக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க, 10 நாட்கள் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடத்துக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணியில், ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
![]() |
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி, 14ம் தேதி கூறியிருந்தது.இந்நிலையில், மனுதாரர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:மதுராவில், கிருஷ்ணர் கோவிலுக்கு அருகில், 1800களில் இருந்து, பரம்பரை பரம்பரையாக இவர்கள் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, 100க்கும்மேற்பட்ட வீடுகளை இடித்துள்ளனர். மீதமுள்ள, 80 வீடுகளையும் இடிக்க முயற்சிக்கின்றனர்.உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், உடனடியாக நாட முடியவில்லை. கட்டடங்களை இடிக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது.இதையடுத்து, கட்டடங்கள் இடிப்பதற்கு, 10 நாட்கள் தடை விதித்து, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement