தேர்தல் மோசடி வழக்கு : ஆக. 25ல் ஆஜராக டிரம்ப்பிற்கு உத்தரவு| Election fraud case: Aug. Order for Trump to appear on the 25th

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 2017-ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்டு டிரம்ப், 78 வெற்றி பெற்று அதிபரானார்.
இவர் மீது அரசு ஆவணங்களை மறைத்து வைத்தது, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

latest tamil news

இதில் தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கில் டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராக மாகாண கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.