Arjun: நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த அர்ஜுன்..கதையை கேட்டவுடன் முடிவை மாற்றிய ஆக்ஷன் கிங்..!

தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் அர்ஜுன் நேற்று தன் 61 ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அர்ஜுன் ஆரம்பகாலகட்டத்தில் இனி மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இருந்தாராம். ஆனால் அந்த முடிவை இயக்குனர் ஷங்கரின் ஜென்டில் மென் கதை தான் மாற்றியது என கூறியுள்ளார் அர்ஜுன்.

அதாவது அர்ஜுன் 1981 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானாலும் 1984 ஆம் ஆண்டு ராம நாராயணனின் இயக்கத்தில் வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தமிழில் நடித்து வந்தார் அர்ஜுன்.

அர்ஜுன் எடுத்த முடிவு

இருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன் சொந்த பணத்தை வைத்து தானே இயக்கி நடிக்கலாம் என முடிவெடுத்த அர்ஜுன் சேவகன் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடிக்க துவங்கினார். மேலும் அந்த காலகட்டங்களில் வேறெந்த இயக்குனரின் இயக்கத்திலும் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்து இருந்தாராம்.

Harold das- rolex: ஹரோல்ட் தாஸ் – ரோலக்ஸ்.. அப்பா – மகனா ? கண்டிப்பாக கிடையாது..ஏன் தெரியுமா ?

அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஷங்கர் ஜென்டில் மென் கதையை அர்ஜுனிடம் கூற வந்துள்ளார். முதலில் அர்ஜுன் கதையை கேட்டுவிட்டு நடிக்க வேண்டாம் எனதான் இருந்தாராம். ஆனால் ஷங்கர் வந்து ஜென்டில் மென் கதையை சொன்னவுடன், இப்படத்தை மிஸ் செய்யக்கூடாது என முடிவெடுத்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அப்படம் அர்ஜுனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில் மென் திரைப்படம் பல வசூல் சாதனைகளை செய்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியது எனலாம். அதையடுத்து மீண்டும் ஷங்கர் மற்றும் அர்ஜுனின் கூட்டணி முதல்வன் படத்தின் மூலம் இணைந்து வெற்றிக்கொடி நாட்டியது.

மாற்றிய ஜென்டில் மென்

இந்நிலையில் கிட்டத்தட்ட பல மொழிகளில் அர்ஜுன் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டி வருகின்றார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் என்ற ரோலில் நடித்து வருகின்றார் அர்ஜுன்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இவரின் கதாபாத்திரத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நேற்று அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. தற்போது இணையத்தில் ஹரோல்ட் தாஸ் கிலிம்ஸ் வீடியோ செம ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.