ஒரு லிட்டர் ரூ.290 – அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை… மழுப்பல் காரணம் சொன்ன பாகிஸ்தான் அரசு..

பாகிஸ்தானில் அப்துல் உல் ஹக் தலைமையிலான காபந்து அரசு பொறுப்பேற்ற 48 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.50 வரை உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நிதிப் பிரிவு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 290.45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல டீசல் விலையும் ஒரே நாளில் 20 ரூபாய் வரை உயர்ந்து லிட்டருக்கு 293.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காபந்து பிரதமர் அப்துல் உல் ஹக் ஒப்புதல் அளித்ததை அடுத்து 16ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அதிரடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என பாகிஸ்தான் நிதிப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு தலைக் காதலால் விபரீதம்… 12 வயது சிறுமியை குத்திக்கொன்ற கொடூர இளைஞன்…

எனினும், மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 1 முதல் வெறும் 15 நாட்களுக்குள் சுமார் லிட்டருக்கு 40 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

காபந்து அரசிடம் ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பை ஒப்படைத்த நிலையில், அங்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த போதிலும் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற சூழல் காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காபந்து அரசு உள்ளது.

காஞ்சி: பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

டாலர் பற்றாக்குறை பிரச்னை காரணமாக தினசரி இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. டாலர் பற்றாக்குறையால் பல்வேறு இறக்குமதி தடைபட்டுள்ளன. இதனால் மூலப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுசுகி, டொயட்டோ உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை சில வாரங்கள் நிறுத்திவைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வார இறுதி நாள்கள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சூப்பர் அப்டேட்!

பாகிஸ்தானில் அண்டை நாடான இந்தியாவில் கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.