தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்க 3வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. காவிரி நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த சில […]