'டைகர் நாகேகஸ்வரராவ்' டீசர் வெளியீடு

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி தேஜா நடிக்கும் புதிய படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். வரும் அக்டோபர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தபடம் ஆந்திரா மற்றும் தமிழகத்தை கலக்கிய ரயில் திருடன் நாகேஸ்வராவின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகிறது. ரவி தேஜாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது.

இது ஒரு கில்லாடியான திருடன் பற்றிய படம் என்றாலும், அவனை சூப்பர் ஹீரோ போன்று டீசர் சித்தரித்துள்ளது. ஜெயிலில் இருந்து தப்பிப்பதில் கில்லாடியான அவனை கண்டு போலீசே பயப்படுவது போன்று கதை அமைந்துள்ளது. 'சார் அவன் பக்கம் மட்டும் போயிடாதீங்க.. நாகேஸ்வரராவுக்கு இருக்குற மூளைக்கு பாலிடிக்ஸ் பக்கம் போயிருந்தா பவர் சென்டர் ஆயிருப்பான்…' என ஏகப்பட்ட பில்டப் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.