பீய்ஜிங்: சீனாவில் துவங்கிய உலக ரோபோக்கள் எக்ஸ்போ மாநாட்டில் மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
சீன தலைநகர் பீஜிங்கில் உலக ரோபோக்கள் எக்ஸ்போ துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தின. இதில் எக்ஸ் ரோபோட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்ளை கவர்ந்தன.
இந்த ரோபோக்கள் புதிய தொழில்நுட்பத்துடன், மனிதர்களை போலவே பாவனைகளையும் அசைவுகளையும் ரோபோக்கள் வெளிப்படுத்தின.
இது குறித்து அந்நிறுவனம் கூறியது, மூட்டு பகுதியை மிக இயல்பாக அசைக்கும் வகையிலும், நுண்ணிய அசைவுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மனித உருவ ரோபோக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தன.இம்மனித உருவ ரோபோக்களின் யதார்த்தமான தோற்றம், கண் அசைவு, விரல் அசைவு உள்ளிட்டவை வியக்கவைக்கும் வகையில் அங்கிருந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர். தவிர ஷியோமி வழங்கிய நாய் வடிவ ரோபோ பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement