4 மாதங்களில் 20 லட்சம் பேர்: படகு சவாரியில் அசத்தும் தமிழக சுற்றுலாத் துறை!

நான்கு மாதங்களில் 20 லட்சத்துக்கும் அதிமானோர் படகு சவாரி மேற்கொண்டதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச் சந்திரன் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் இன்று சென்னை, வாலாஜா சாலை, சுற்றுலா வளாக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஜூலை வரை 4 மாதங்களில் மொத்தம் 20 லட்சத்து 80 ஆயிரத்து 245 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

நாகையில் 3 இலங்கை கடற் கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது

மேலும் அவர் சுற்றுலாத் துறை முன்னெடுத்து வரும் பணிகள் குறித்து பேசினார். “சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது.

வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 588 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.

கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம்கள் மூலமாக இயக்கப்படும் படகுகளில் மொத்தம் 42 லட்சத்து 22 ஆயிரத்து 945 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை 4 மாதங்களில் மட்டும் மொத்தம் 20 லட்சத்து 80 ஆயிரத்து 245 சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.