வாட்ஸ்அப் புதிய அம்சம்: மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது. கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. வாட்ஸ்அப் உலகம் முழுவதும் செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அம்சங்களையும் புதுப்பிப்புகளையும் தொடர்ந்து வழங்கிக்கொண்டு வருவதற்கு வருவதற்கு இதுவே காரணம். இப்போது நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு பெரிய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது கடந்த பல மாதங்களாக பயனர்களுக்கான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபராக இருந்தால், எச்டி தரத்தில் புகைப்படங்களை எளிதாக அனுப்பலாம்.
இதுவரை பயனர்கள் வாட்ஸ்அப்பில் உயர் தெளிவுத்திறன் புகைப்படங்களை அனுப்பும் போது, அதன் தரம் குறைந்து, அளவும் சுருக்கப்பட்டது. ஆனால் இப்போது பயனர்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை எளிதாக அனுப்ப முடியும். வாட்ஸ்அப்பின் இந்த அப்கிரேட் பற்றிய தகவலை மெடா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் தானே தெரிவித்துள்ளார். வியாழன் மாலை, அவர் அனைத்து பயனர்களுக்கும் எச்டி புகைப்பட அம்சத்தை வெளியிட்டார்.
மார்க் ஜுக்கர்பெர்க் இந்த தகவலை அளித்தார்
வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் சேனல் மற்றும் ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் மார்க் ஜூக்கர்பெர்க் பயனர்களுக்கு தெரிவித்தார். இந்த அம்சம் தொடர்பான வீடியோவையும் மார்க் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் எச்டி புகைப்பட வசதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
இந்த வழியில் HD புகைப்படங்களை அனுப்ப முடியும்
வாட்ஸ்அப்பில் எச்டி புகைப்படங்களை அனுப்ப, முதலில் பயனர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்க வேண்டும். அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்ட பிறகு, வாட்ஸ்அப்பில் போட்டோ ஷேரிங் டேப்பில் HD பட்டனைக் காண்பீர்கள். இந்த HD பொத்தானைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் இரண்டு விருப்பங்களைப் பெறுவீர்கள். அதில் நிலையான அளவு மற்றும் HD அளவு விருப்பங்கள் இருக்கும். நீங்கள் HD தரத்தில் புகைப்படத்தை அனுப்ப விரும்பினால், HD விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப்பில் எச்டி தரத்தில் புகைப்படங்களை அனுப்பினால், உங்கள் தரவு நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எச்டி புகைப்பட வசதிக்கு முன், வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் பயனர்களுக்கு திரை பகிர்வு அம்சத்தை வெளியிட்டது. இதில், வீடியோ அழைப்பின் போது பயனர்கள் தங்கள் தொலைபேசியின் திரையைப் பகிர முடியும்.
வீடியோ மெசேஜ் அம்சம்:
சமீபத்தில், iOS மற்றும் Android இல் உள்ள சில பீட்டா சோதனையாளர்களுக்கு செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் ஒரு புதிய வீடியோ செய்தி அம்சத்தை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் பீட்டா பயனர்களுக்கு வீடியோ செய்திகளை பதிவு செய்து அனுப்பும் வசதியை வழங்குகிறது. பெறுநர்கள் ஒரு வீடியோ செய்தியைப் பெறும்போது அது சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இது அதன் நம்பகத்தன்மையை பெரிதும் அதிகரிக்கும்.
முதலில் வாட்ஸ்அப்பில் தட்டச்சு, அதாவது டைப் செய்து மெசேஜ் அனுப்பும் வசதிதான் இருந்தது. அதன் பின்னர் வாய்ஸ் மெசேஜுக்கான வசதி அளிக்கப்பட்டது. ஒரு பயனரால் மெசேஜை டைப் செய்ய முடியவில்லை என்றாலோ, அல்லது அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, அவர் தான் பகிர விரும்பும் செய்தியை வாய்ஸ் மெசேஜ் மூலம் பேசி ஆடியோ மெசேஜ்களை எளிதாக அனுப்பலாம்.