உ.பி., கவர்னரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆக.,9ம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று சாமியார்களைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்குப் பின்பு, உத்தரகாண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார். இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்றார். இதையடுத்து இமயமலை பயணத்திலிருந்து உத்தர பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார்.

லக்னோ சென்ற ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து ‛ஜெயிலர்' படம் பார்க்கவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், 'ஜார்க்கண்டில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஜார்க்கண்டில் இது மூன்றாவது முறை. ஒவ்வொரு வருடமும் இங்கு வருவேன். விரைவில் சென்னை திரும்ப இருக்கிறேன்' என்றும் பேசினார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.