ஏர்டெலின் புதிய 99ரூபாய் அன்லிமிட்டட் இணைய வசதி! ஜியோவுக்கே டஃப் கொடுக்கும் அதிரடி டேட்டா பிளான்!

டிஜிட்டல் யுகத்தில் இணையம் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற நிலை வந்து விட்டதால் தனிநபர் டேட்டா பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெலிகாம் உலகின் முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போதைய நிலையில் பெரும்பான்மையான மொபைல் பயனாளர்கள் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டங்களின்படி, ஒரு மாதத்திற்கு தினம்தோறும் குறிப்பிட்ட அளவு GB கணக்கில் இணையம், அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ Vs ஏர்டெல்

இந்நிலையில், என்னதான் தினம்தோறும் லிமிட்டட் இணைய வசதி வழங்கப்பட்டாலும் இணையவழியாக வேலை செய்பவர்கள், கேமிங், வீடியோ உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இது போதாதது என்ற நிலைதான் உள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு ஒரு நாள் டேட்டா ரீசார்ஜ் போன்ற பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த போட்டியில் முன்னணியில் இருப்பது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தான்.

ஏர்டெலின் புதிய திட்டம்

அதில் ஜியோ தன்னுடைய Data add-on திட்டத்தை ஒரு ஜிபி 15 என்ற விலையில் இருந்து துவங்கி ஆயிரக்கணக்கில் திட்டங்கள் உள்ளன. அதே போல், பாரதி ஏர்டெல் நிறுவனமும் ஒரு ஜிபி டேட்டா 19 ரூபாயில் துவங்கி பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் அறிவித்திருக்கும் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ஜியோவுக்கே நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

99 ரூபாய்க்கு அன்லிமிட்டட் நெட்

100 ரூபாய்க்கு கீழ் எந்த டெலிகாம் நிறுவனமும் அன்லிமிட்டட் நெட் கொடுப்பதில்லை. ஆனால், ஏர்டெலின் 99 ரூபாய் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தின்படி, ஒரு நாளைக்கு நீங்கள் அன்லிமிட்டட் இணைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டம் அன்லிமிட்டட் என்றாலும், முதலில் 30GB வேகமான இணையவசதி வழங்கப்படும். அதற்கு பிறகு 64Kbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நாள் மட்டுமே இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். ஏதாவது இணைய வழி தேர்வுகள், முக்கியமான கேமிங் செஷன்ஸ், படங்களை பார்க்கும்போது உள்ளிட்ட முக்கியமான நாட்களில் பயனர்கள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

100 ரூபாய்க்கு கீழ் ஏர்டெல் vs ஜியோ திட்டங்கள்

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் 100 ரூபாய்க்கு கீழ் பல்வேறு டேட்டா பூஸ்டர் திட்டங்களை கொண்டுள்ளன. 1GB டேட்டா பூஸ்டர் ஜியோவில் 15 ரூபாய்க்கும், ஏர்டெலில் 19 ரூபாய்க்கும் கிடைக்கிறது. 2GB நெட் ஜியோவில் 25ரூபாய்க்கும் ஏர்டெலில் 29 ரூபாய்க்கும், 3GB நெட் ஏர்டெலில் 58 ரூபாய்க்கும், கிடைக்கிறது. மேலும் ஜியோவில் 1.5GB 19ரூ, 2.5GB 29ரூ, 6GB 61ரூ என்ற விலையில் கிடைக்கிறது. ஏர்டெலில் 4GB 65ரூ, 5GB 98ரூ என்ற விலையில் கிடைக்கிறது. இவற்றை பெறுவதற்கு நீங்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள மாதாந்திர பிளான் அல்லது வேறு ஏதாவது ரீசார்ஜ் திட்டங்கள் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.