சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் பயணமாக டில்லிக்குச் சென்றுள்ளார். திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. அண்மையில் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘எனக்கு அதிகாரம் இருந்தால் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என்று கூறினார். ஆளுநரின் இந்த கருத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு […]
