லண்டன்: பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற நர்சை போலீசார் கைது செய்தனர். அவரை காட்டிக் கொடுக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உதவியது தெரியவந்தது. ரவி ஜெயராம் என்ற டாக்டர் கவுண்டஸ் செஸ்டர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். குழந்தைகள் நல டாக்டரான இவர், பச்சிளம் குழந்தைகள் மரணம் தொடர்பாக நர்ஸ் மீது சந்தேகம் தெரிவித்தார்.
இதனையடுத்து, விசாரணைக்கு பிறகு லூசி லெட்பி(33) என்ற நர்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாகவும், 6 குழந்தைகளை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement